பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

பாணந்துறை- பல்லேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மீது,  மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ஒருவர்  படுகாயமடைந்த நிலையில்  பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்