யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்று (26) காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன
குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் துணை தூதுவர் ச. பாலசந்திரன், இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
அதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை