அமைச்சரவை தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியார்களுடனான சந்திப்பு zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன் போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இவர்களது சம்பள பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாக கம்பனிகள் இதற்கான கூட்டு ஒப்பந்த காலத்தை 4 வருடங்களாக நீடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர் என்றும் கூறினார்.
இதேவேளை உடன்படிக்கையுடன் சம்பந்தப்பட்ட தொழில் சங்கங்கள் 2 வருடங்களுக்கு வரையறுக்க வேண்டும் என்று வழியுறுத்தியுள்ளன. சம்பள பிரச்சினையில் எதிர்நோக்கப்பட்டுள்ள இந்த விடயங்களுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படுகின்றது.
அதேவேளை தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் வழங்கும் அரசாங்கத்தின் உறுதிப்பட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. சம்பள நிர்ணய சபையின் ஊடாக இதனை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சரவையில் நேற்று விரிவாக ஆராயப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை