தடைகளை உடைத்து தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள், குருந்தூர்மலை நிலைமை தொடர்பில் ஆராய்வு; வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன!
தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைச்சி பிரதேசசபைத் தவிசாளர் அ.வேளமாளிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேசசபைத் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், பிரதேசசபை உறுப்பினர்களான சிலோகேஸ்வரன், த.றமேஷ், ச.ஜீவராசா உள்ளிட்ட குழுவினர் (27) இன்றைய தினம் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை நிலவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகச் சென்றிருந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை குருந்தூர் மலைப் பகுதிக்குச் செல்லவிடாமல் தடுத்தனர்.
இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தொல்லியல் திணைக்களபணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி இராணுவம் குருந்தூர்மலைக்குச் செல்ல தடைவிதிக்கின்றமை தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் அங்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்டதொல்பொருள் திணைக்களத்தினர் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை குருந்தூர் மலைப் பகுதிக்குள் அழைத்துச்சென்றனர்.
அங்கு சென்ற தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் அங்கு இடம்பெறுகின்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைள் மற்றும், அங்கு நீதிமன்ற கட்களைகளுக்கு மாறாக இடம்பெறும் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்ததுடன், அங்கு ஆதிஐயனார், ஆதிசிவன் இருந்த இடத்தில் வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை