இலங்கைக்கு நாளை வரும் கொவிட் – 19 தடுப்பூசிகள்..
இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கொவிட் – 19 தடுப்பூசிகள் நாளை (27) வியாழக்கிழமை கொழும்பினை வந்தடையவுள்ளது என கொவிட் – 19 தடுப்பூசி தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரான லலித் வீரதுங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் தற்பொழுது நடைபெறும் கொவிட் தடுப்பூசியை நாட்டு மக்களுக்கு வழங்கும் பணிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசி ஏற்றும் முதல் கட்ட நடவடிக்கையில் சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது. இதில் முதல் கட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.
2ஆம் கட்டத்தின் கீழ் தொற்றை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள இராணும், பொலிசாருக்கு வழங்கப்படவுள்ளது. இதில் சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வரை தடுப்பூசியை பெற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று சுகாதார அமைச்சிடம் கையளிப்பாளர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து நாடளாவிய ரீதியில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) ஆரம்பிக்கப்படும் என அவர் கூறினார்.
இந்த தடுப்பூசி ஏற்றல் நடடிக்கை முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கப்படும் எனவும்
மூன்றாம் கட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் இவர்களின் எண்ணிக்கை 34% ஆகும் அதாவது 3.4 தொடக்கம் 3.5 மில்லியன் என மதிப்பிடப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக சீனா 70 இலட்சம் தடுப்பு மருந்துகளை வழங்கவுள்ளது. இதேபோன்று ரஷ்யாவும் எமக்கு தடுப்;பு மருந்துகளை வழங்கவுள்ளது.
இந்த மருந்துகளுக்கான அங்கீகாரம் சர்வதேச ரீதியில் இன்னும் கிடைக்கவில்லை. இதேபோன்று எமது NMR நிறுவனம் இதுதொடர்பாக விரவாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்த நிறுவனம் எந்த தடையீடுகளும் இன்றி சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை