யாழ் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் வெற்றியடைந்துள்ளது.
வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும்
அளிக்கப்பட்டன. 15 பேர் நடுநிலை வகித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையிலிருந்த யாழ் மாநகரசபையை வி.மணிவண்ணன் தரப்பினர்
கைப்பற்றிய பின்னர் முதலாவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தனர்.
வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக மக்களிற்கு காட்சிப்படுத்தவில்லை
என்பது உள்ளிட்ட பல காரணங்களை குறிப்பிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய
மக்கள் முன்னணி என்பன எதிர்ப்பு தெரிவித்தன.
இதன்போது, ஈ.பி.டி.பி பலமான ஆதரவை மணிவண்ணன் தரப்பிற்கு வழங்கியது.
யாழ்ப்பாணம் மாநகரசபையில் மொத்தமாக 45 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் . அதில்
கூட்டமைப்பு -16, முன்னணி (மணிவண்ணன்) -10, ஈபிடிபி -10, அகில இலங்கை தமிழ்
காங்கிரஸ் – 3, ஐக்கிய தேசியக் கட்சி -3, சிறிலங்கா சுதந்திரக் கட்சி -2, தமிழர்
விடுதலைக் கூட்டணி -1 என்கிற அடிப்படியில் உறுப்புரிமை கொண்டுள்ளார்கள்.
இன்றைய வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலோனோர் நடுநிலை
வகித்தனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 3 உறுப்பினர்கள் எதிராகவும் 10 உறுப்பினர்கள்
ஆதரவாகவும் வாக்களித்தனர்.
கருத்துக்களேதுமில்லை