கடல் பாம்பை புதிய வகை மீன் இனம் என நினைத்து சந்தைக்கு கொண்டு சென்ற நபர்: வாழைச்சேனை பகுதியில் சம்பவம்!

மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய கடல் பாம்பு ஒன்றை புதிய இன மீன் என நினைத்து மீன் சந்தைக்கு ஒருவர் கொண்டு சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலையத்துக்கே அவர் இந்த கடல் பாம்பை சந்தைக்கு கொண்டு சென்றுள்ளார்.

தான் மீன் பிடிக்கும்போது தனது வலையில் சிக்கியது புதுவகை மீனாக இருக்குமோ எனும் சந்தேகத்தில் அதனை காண்பிப்பதற்காக குறித்த மீனவர் விற்பனை நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

அதனை பார்வையிட்ட ஏனைய மீனவர்கள் அது கடலில் உள்ள அஞ்சாலை எனும் வகை பாம்பு என்று அடையாளப்படுத்தினர்.

குறித்த கடல் பாம்பு 7 அடி உயரமும் 8 கிலோ எடையும் கொண்டதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்