ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்பே – தவராசா கலையரசன்.
பாதுகாப்புச் செயலாளராக இருந்து யுத்தத்தை வழி நடத்திய ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்பாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
நிந்தவூர் அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவியை கௌரவித்து பாடசாலை மாணவர்களுக்கான புத்தக பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (29) வெள்ளிக்கிழமை காலை 10மணியளவில் இடம்பெற்றது.
இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்…
ஜனாதிபதி ஆணைக்குழுவை தமிழ் மக்கள் ஏற்க முடியாத சூழல் இருக்கின்றது. ஏனென்றால் போரை முடிவுக்கு கொண்டு வந்து 12 ஆண்டுகள் ஆகியும் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வில்லை. அது மாத்திரமல்ல ஐக்கிய நாடுகள் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட ஏதாவது ஒன்றை அரசாங்கம் நிறைவேற்றி இருக்கின்றதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.
அதனடிப்படையில் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமையப் பெறுகின்ற ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் எழப்போகும் நெருக்கடியிலிருந்து இலங்கை தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவால் பொறுத்தமட்டில் தமிழ் மக்களாகிய எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
ஏனென்றால் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளாக நியமித்து இருப்பவர்கள் கடந்தகால போர்களில் குற்றவாளியாக இனங்காணப்பட்டவர்கள் உயர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருப்பதும் இந்த நாட்டின் ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக இருந்து யுத்தத்தை வழி நடத்திய ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்பாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.
எனவே போர்க்குற்ற விடயத்தில் சர்வதேச ரீதியாக முன்னெடுக்கும் விடயங்கள் உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டும் உள்ளக ரீதியான பொறிமுறை என்கின்ற விடயத்தை நடைமுறைப்படுத்துவது தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயற்பாடுகளாகவே அமையும் .
பாதிக்கப்பட்ட மக்கள் இதுவரைக்கும் எந்த வரும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வகையில் அரசாங்கங்கள் எந்த ஒரு வசதியினை ஏற்படுத்திக் கொடுக்க வில்லை ஏனென்றால் அழிவுற்று பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கிராமங்களும் இன்னும் அழிவுற்றுக் கொண்டே இருக்கின்றது அவசர அவசரமாக கிழக்கு மாகாணத்தில் பல முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது இச் செயல்கள் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அழிவுகளையும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளாகவே அமைகின்றது.
சர்வதேச ரீதியாக ஐக்கிய நாடுகள் சபை ஊடாக இந்த நாட்டில் நிலையான சமத்துவம் சகல இனங்களும் சமமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் சார்பாகமக்கள் சார்பாக விடுக்கின்றேன் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் (Best of Young) சமூக அமைப்பினர், பாடசாலை ,அதிபர் ,பிரதி அதிபர், ஆசிரியர்கள் , ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை