வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (30) இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தொிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் பொலனறுவை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அநேக இடங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இன்று (30) பி.ப. 2.00 மணியின் பின் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதோடு அநேக இடங்களில் மில்லிமீற்றர் 50இற்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடுமென தொிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்