மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள்..
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்ப்பார்வை தாதியர் ஒருவருக்கு, முதலாவது தடுப்பூசி இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்றப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சனி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதி பணிப்பாளர், வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுமார் 2 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்படவுள்ள நிலையில் இன்றைய தினம் 1200 கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் க.கலாரஞ்சனி தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுபவர்களுக்கு ஏற்றப்பட்டு, பின்னர் ஏனையர்வகளுக்கு ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை