சம்மாந்துறையில் நகை கொள்ளையிட்ட மூவர் கைது!
(பாறுக் ஷிஹான்)
வீடுடைந்து தங்க நகைகளைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (29.01.2021) அன்று நள்ளிரவு வேளை அம்பாறை – சம்மாந்துறை மலையடிக்கிராம பிரதேசத்தில் வீடுடைத்து தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் அவசரப்பிரிவான 119 இலக்கத்திற்கு முறைப்பாட்டு கிடைக்கப்பெற்றிருந்தது.
குறித்த முறைப்பாட்டிற்கமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எச்.ஜயலத்தின் வழிகாட்டலுடன், சம்மாந்துறை பொலிஸ் நிலையக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற பொலிஸ் உத்தியொகத்தர்களான ஆரியசேன, துரைசிங்கம் குழுவினர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க மூன்று சந்தேக நபர்கள் காலை கைது செய்யப்பட்டனர்.
இதன் போது கைதானவர்களிடமிருந்து களவாடப்பட்ட 5 அரை பவுண் தங்க நகை உட்பட 19,500 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைதான மூவரும் இன்றைய தினம் (30) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை