வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா!

வடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று தீர்மானித்துள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு வவுனியாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களே போட்டியிடவேண்டும் என முன்மொழிந்த போது எவரும் எவரும் அந்த தீர்மானத்தை எதிர்க்காததால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.