மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் யானை ஒன்று உயிர் இழந்த சம்பவம் இன்று (02) செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகிதநகர் கிராம சேவகர் பிரிவில் காவத்தமுனை கிராமத்தில் இறால் வளப்பு பிரதேசத்தில் புகுந்த யானை இறால் பண்னைக்கு வழங்கப்பட்டுள்ள மின்சாரத்திற்கான வயரினை இழுத்த நிலையில் வயர் அறுந்து மின்சாரம் தாக்கியதில் குறித்த யானை இறந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யானை மின்சாரம் தாக்கி இறந்தது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் கிரான் காரியாலய அதிகாரிகளுடன் இணைந்து வாழைச்சேனை பொலிஸாரும் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்