ஆயிரம் ரூபா சம்பளம்- நாடு தழுவிய ரீதியில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு!
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினம் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப் படுகிறது.
நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அரசாங்கத்தால் வாக்குறுதி வழங்கப்பட்ட நிலையில் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியே குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவாக நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி மற்றும் மலையகத்தில் இயங்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை