கவனயீர்ப்பு பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்னி மக்கள் அமைப்பு , வவுனியா மாவட்ட மக்கள் காப்பகம் ஆகியவற்றினால் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பழைய பேரூந்து நிலைய முன்றலில் இன்று (06.02.2021) காலை 9.30 மணி தொடக்கம் 10.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  , ஏசி அறையில் உல்லாசமாய் இருப்பவரே இளைஞர்களின் இரத்தத்தை வசனங்களால் சூடாக்காதே இழந்தது போதும் , வவுனியாவில் கடைகளை திறக்க பி.சி.ஆர் தேவை  வெளிமாவட்டத்திலிருந்து ஊர்வலம் நடத்தியவர்களுக்கு பி.சி.ஆர் தேவையில்லையா? , யுத்தம் முடிந்த பின்பும் பித்தாலட்டம் எதற்கு , இல்லாமல் போன எங்கள் உறவுகளுக்காக இருக்கின்றவர்களை சாகடிக்காதே வாழ வழி செய் போன்ற பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகளை எந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் 10க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.