பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி யாழ்- நல்லூர் அலங்கார வளைவை வந்தடைந்தது!
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை யாழ்ப்பாணம் மாநகருக்குள் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் அணிதிரண்டு வரவேற்றனர்.இந்த வரவேற்பில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் பங்கேற்றார்.
ஐந்தாம் நாளான இன்று காலை கிளிநொச்சியில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
முகமாலையை வந்தடைந்த போது மக்கள் அணிதிரண்டு யாழ்ப்பாணத்துக்கு பேரணியை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து சாவகச்சேரி நகரிலும் வரவேற்பளிக்கப்பட்டு தீப்பந்தங்கள் ஏந்தி போராட்டம் இடம்பெற்றது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகருக்குள் வரவேற்கும் வகையில் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் பேரணிக்கு வரவேற்பளித்தனர்.
கருத்துக்களேதுமில்லை