சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பை மீளப் பெற்றது அரசாங்கம்!

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு நடவடிக்கை அரசாங்கத்தினால் முற்றாக மீளப்பெறப்பட்டுள்ளது.

இன்று காலை தனது பாதுகாப்புக் கடமையிலிருந்து சிறப்பு அதிரடிப்படையினர் மீளப்பெறப்பட்டதாக சுமந்திரன் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்த அறிவிப்பு சிறப்பு அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோதிலும் தனக்கு எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போது சுமந்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவிக்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்