மட்டக்களப்பு வாவியில் ஆனொருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு வாவியில்  ஆண் ஒருவரின் சடலம் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பின்பகுதியில் உள்ள வாவியில் இருந்தே இரவு 7.00 மணியளவில் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் புதூர் பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்கவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிசாருடன் இணைந்து மட்டக்களப்பு தலைமையக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்