மட்டக்களப்பு காரமுனையில் சிங்கள குடியேற்ற முயற்சி-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை பிரதேசத்தில் 178 சிங்கள குடும்பங்களை குடியேற்ற முயற்சி எனவே மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் உண்மையாக இங்கு குடியிருக்காத சிங்கள மக்களுக்கு உங்கள் பதவியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பிழையான விடயத்துக்கு துணை போகவேண்டாம். மீறுச் செயற்பட்டால் மக்கள் உங்களுக்கு எதிராக கவனயீர்பு போராட்டத்தை நடாத்துவார்கள்; என முன்னாள் பாராளுமன்ற உறுப்;பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பஸார் வீதியிலுள்ள கிழக்கு ஊடாக மன்றத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவத் இவ்வாறு தெரிவித்தார்
.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனை காரமுனை என்கின்ற மாங்கேணி கிராம அதிகாரிக்குட்பட்ட தெற்கு பிரதேசத்தில் 178 சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த மக்களை குடியேற்றுவதற்கான செயற்திட்டம் கடந்த 2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகவும் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக அந்த பகுதியில் குடியிருந்த சிங்கள மக்கள் குடியிருந்து 1985 ஆம் ஆண்டு யுத்த சூழல் காரணமாக் இடம்பெயர்ந்ததாக காரணம் காட்டுகின்றனர். அந்த 178 குடும்பங்களும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல இங்கு இருக்கவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றது. இந்த செயற்திட்டம் 2011 ஆரம்பிக்கப்பட்ட போது இது தொடர்பாக நான் காணி அமைச்சருடன் பேசி அதனைதடுத்து நிறுத்தியிருக்கின்றேன்.
திம்புலாகல தேரரால் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த திட்டம் 2015 ஒஸ்ரின் பெனாண்டே கிழக்கு மாகாண ஆளுநராக இருக்கும்போது காணி உதவி ஆணையாளர் இருந்த சிங்கள பெண் 178 பேருடைய ஆவணத்துடன் தேரர் சென்றபோது அதனை அவர் பாத்துவிட்டு பொயயான ஆவணங்கள் என அதனை நிராகரித்தார்.

இந்த நிலையில் அவர்கள் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருந்தபோது அப்போது திருமதி சாள்ஸ் அரசாங்க அதிபராக இருந்தபேது இந்த பிரச்சனை பூதாகரமானது அப்போது காணி ஆணையாளர் அனுமதிப்பத்திரம் வழங்கவேண்டும் என நாவலடியிலுள்ள கேணிநகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் நடாத்த திட்மிடப்பட்டது இதனை அறிந்த நான் காணி அமைச்சரிடம் தெரிவித்து அதனை தடுத்து நிறுத்தினேன். ஆனால் அந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந் 178 பேருக்கும் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது
இந்த 178 குடும்பங்களும் குடியேறி 1985 வெளியேறியிருந்தால் அவர்கள் 1981ம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் அதனை கொடுப்பது நியாயமானது சிங்களமக்கள் இருந்த இடத்தில் அதை கொடுப்பதற்கு தடையில்லை ஆனால் பிழையான முறையில் குடியேற்றுவதை நாங்கள் எதிர்க்கின்றோம் அப்போது உதவி அரசாங்க அதிபராக இருந்த வாகரை பிரதேசம் மாவட்ட செயலகம் கச்சோரி இவற்றில் அவர்கள் இருந்ததற்கான ஆதாரம் இருக்கும்.

178 குடும்பம் இருப்பதாக இருந்தால் பெரிய கிராமம் அங்கு பௌத்த விகாரை இருந்திருக்கும் பாடசாலை போன்ற பல கட்டிடங்கள் இருந்திருக்கும்; அந்தபகுதி மாணவர்கள் எந்த பாடசாலையில் கல்வி கற்றார்கள், பிறப்புசாட்சி பத்திரம் இருக்கும். எனவே சரியான முறையில் ஆவணங்கள் காட்டப்படவேண்டும். அப்போது அங்கு அவ்வாறனவர்கள் இருக்கவில்லை என அப்போதைய அந்த பகுதி கிராம சேவகராக இருந்த உயிரோடு இருக்கும் கென்றி என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே இங்கு 178 குடும்பம் இருக்கவில்லை என்பது தான் உண்மை அதேவேளை காணிச்சட்டத்தில் குடியேற்றப்பட்டவர்களுக்கு 2 ஏக்கர் ஆனால் இவர்களுக்கு 5 ஏக்கர் வழங்கப்படபோகின்றது அதற்கான அனுமதிப்பத்திரம்; அவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் காணிச்சட்டம் ஒன்றுதான் அதில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் என்ற இருக்கின்றதா? ஆகவே இது கூட பிழையான நடைமுறை காணி அனுமதிப்பத்திரும் மாவட்ட செயலகத்தால் வழங்கப்பட்டதாக கூறுகின்றனர் அந்த அனுமதிப்பத்திரம் சிங்களத்தில் இருக்கின்றது அவ்வாறான ஒரு அனுமதிப்பத்திரம் இதுவரை மாவட்ட செயலகத்தில் வழங்கப்படவில்லை

வழங்கப்படாமல் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது இதில் கையொப்பமிட்ட காணி உத்தியோகத்தர் மட்டக்களப்பில் கடமையாற்றியவருமில்லை மாவட்டத்தைச் சோர்ந்தவருமில்லை அவர் அம்பாறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் அவர் எவ்வாறு இங்கு கடமை மேற்கொள்ளமுடியும் ஆகவே இது முழுக்கமுழுக்க பொய்யான சட்டவிரோதமான நடவடிக்கைஇந்த காணி அனுமதிப்பத்திரம் யார் தயாரித்தாரே அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் எல்லாம் போலியானவை திட்டமிட்டவகையில் குடியேற்ற போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது இதற்கு சில தமிழ் அதிகாரிகள் துணைபோயிருக்கின்றனர்.

இது தொடர்பாக கடந்த வாரம் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலே 178 குடும்பங்களையும் அழைத்து அவர்களுடைய ஆவணங்களை பரீசீலிக்கும் நடவடிக்கை நடைபெற்றது அங்கு நான் சென்று மத்திய காணி ஆணையாளரிடமும் அரசாங்க அதிபரிடமும் கடிதம் ஒப்படைத்தேன்.

இந்த பொய்யானமுறையில் சிங்களமக்களை குடியேற்றி மட்டக்களப்பில் சிங்கள மக்கள் குடிசன தொகையை அதிகரிப்பதற்கும் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கும் இந்த போலி செயற்பாட்டை நிறுத்திவைக்க நீதிமன்றத்தை நாட இருக்கின்றேன்.
அதேவேளை அம்பாறை பொத்துவில் கனகர்; கிராமத்தில் நீண்டகாலமாக மக்கள் வாழ்து யுத்தத்தால் வெளியேறிய சுமார் 300 குடும்பங்களை இன்றுவரை குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை அந்த மக்கள் மிக கஷ;டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த மக்கள் அப்படியிருக்க சிங்கள மக்களுக்கு திட்டமிட்டு பொய்யான ஆவணங்களை தயாரித்து காணியிருக்கும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அத்துமீறிய திட்டமிட்ட சிங்கள குயேற்ற இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

இவ்வாறு கெவிலியாமடுவில் ஆயிக்கனக்கான ஏக்கர் காணியை ஊர்கால்படையினரை வைத்து பயிர்ச் செய்கை என்ற பேர்வையில் குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வாறு மயிலத்தனைமடு மேச்சல்தரையும் சிங்கள மக்களை குடியேற்ற திட்டம்.
புனானையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்கவேண்டும் என திம்புலாகல தேரர் 50 ஏக்கர் காணி வாகரை பிரதேச செயலாளரிடம் கோரிக் கொண்டிருக்கின்றார். இவற்றுக்கு எல்லாம் காரணம் மட்டக்களப்பு வனபரிபாலனசபை ஒரு சிறு துண்டை தமிழ் மக்கள் பிடித்தால் உடனடியாக சட்டத்தை நாடுகின்றனர் ஆனால் காரமுனையில் இந்த 178 குடும்பங்குளக்கும் காணிவழங்க இங்கு இருக்கின்ற சிங்கள அதிகாரி பூரண ஆதரவை வழங்;கியுள்ளார்.

எனவே திட்டமிட்டு சிங்களகுடியேற்றத்தை ஏற்றுவதற்கு சிங்கள அதிகாரிகள் செயற்படுவதை ஏற்றுக் கொள்ளமுடியாத இந்த நாடு ஒன்றாக இருந்தால் நீதி ஒன்றாக இருந்தால் இவ்வாறான செயற்பாடுகள் நடாத்தப்படமுடியாது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.