பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை; பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக முல்லை பொலிஸ் நிலையங்களால் “பி” அறிக்கையூடாக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக “பி” அறிக்கையூடாக முல்லைத்தீவு போலீஸ் நிலையங்கள் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளன.

ஏற்கனவே பேரணிக்கு தடைகோரி ARஅறிக்கையூடாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள போலீஸ் நிலையங்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு நீதிமன்று வழங்கிய உத்தரவு மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தே, போலீஸ் நிலையங்கள் “பி” அறிக்கையூடாக பேரணியில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் உள்ளடங்கலான குழுவிற்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பிலே சிரேஸ்ட சட்டவாளர் ரி.பரன்சோதி மற்றும், சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன்ஆகியோரிடம் தொடர்புகொண்டுகேட்டபோது,

ஏற்கனவே குறித்த பேரணிக்கு தடைகோரி போலீஸ் நிலையங்களிலிருந்து AR அறிக்கையூடாக முல்லைத்தீவு நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக குற்றம் ஒன்று இடம்பெற்றதற்கான சந்தேகம் இருந்தால் AR அறிக்கையூடாக வழக்குத் தாக்கல் செய்யப்படும். அந்தவகையிலேயே குறித்த வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி நீதிமன்றால் உத்தரவொன்றும் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 08.02.2021 இன்று அதை முடிவுக்குக்கொண்டுவந்து, நீதிமன்றால் கொண்டுவரப்பட்ட உத்தரவு மீறப்பட்டதெனத் தெரிவிக்கப்பட்டு, ஏற்கனவே பேரணிக்கு தடைகோரி வழக்குத் தொடர்ந்திருந்த அனைத்து போலீஸ் நிலையங்களாலும் B அறிக்கையினூடாக வழக்குத்தாக்கல் செய்துள்ளனர்.

அதேவேளை “பி” அறிக்கையூடாக தொடரப்படும் வழக்கென்பது விசாரணைக்குரிய வழக்காகும். இதிலே குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் குற்றச்சாட்டுள்ள நபர்கள் மன்றிலே முற்படுத்தப்படவேண்டும்.

மேலும் அதிலே குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் உள்ளடங்கிய குழுவினருக்கு எதிராக இவ்வாறு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.