பஸ் சாரதியாக மாறிய பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன்

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாவட்டவானில் அணைக்கட்டு கட்டுவதற்கான கல் வைக்கும் நிகழ்வுக்குச் சென்று கொண்டிருக்கும் போது, வீதியில் பயணிகளுடன் ஒரு பஸ் நிறுத்தப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.
தனது வாகனத்தை நிறுத்தி என்ன நடந்ததென்று விசாரித்திருக்கின்றார்.
அதற்கு பஸ் சாரதி வீதி மிக மோசமாகவுள்ளதனால் செல்ல முடியவில்லை. பஸ்ஸிலிருப்பவர்கள் அரச ஊழியர்கள். அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். என்ன செய்வதென்று தெரியவில்லை எனக்கூறியுள்ளார்.
உங்களை பாதுகாப்பாக உரிய இடத்திற்கு நான் கொண்டு செல்கின்றேன் என்று பஸ் சாரதியாக மாறி அவர்களை உரிய இடத்திற்கு பத்திரமாக கொண்டு சேர்த்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்