ஓட்டமாவடியில் தென்னை மரங்களை பதம் பார்த்த யானைகள்!
(ந.குகதர்சன் )
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச கிராமத்திற்குள் திங்கட்கிழமை இரவு புகுந்த யானைகளினால் தென்னை மரங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் உள்ள இரண்டு தனியாரின் காணிக்குள் திங்கட்கிழமை இரவு புகுந்த மூன்று யானைகள் பயன் வழங்கிக் கொண்டிருக்கும் பன்னிரண்டு தென்னை மரங்களை அடியோடு பிடுங்கி அழித்து நாசம் செய்துள்ளது.
குறித்த யானைகள் காவத்தமுனை வழியாக ஆற்றை கடந்து ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் உள்ள தனியாரின் காணிக்குள் புகுந்து தென்னை மரங்கள் மற்றும் வேலிகளை துவம்சம் செய்துள்ளது.
ஓட்டமாவடி பிரதேச கிராமத்திற்குள் இரவு வேளையில் யானை புகுந்து தென்னம் தோட்டத்திற்குள் சென்று துவம்சம் செய்த நிலையில் மக்கள் குடியிருப்புக்குள் வந்து மக்களையும், வீடுகளையும் சேதப்படுத்தும் நிலைமை காணப்படலாம் என மக்கள் அச்சம் கொள்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை