மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிசாருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிசாருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் ஆரம்ப நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை (09) மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பணிப்பாளர் வைத்தியளர் கிரிசுதன் தலைமையில் இடம்பெற்றது.
பாதுகாப்பு படையினருக்கு தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கையில் மாவட்டதிலுள்ள 14 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சுமார் 300 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிசாருக்கு இந்த தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிபபடையில் இன்று மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் முதற்கட்டமாக மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் நிலையம், ஆயித்தியமலை பொலிஸ் நிலையம், ஆகிய 60 பொலிசாருக்கு தடுப்பூ ஏற்றப்பட்டுள்ளதுடன் ஏனைய பொலிசாருக்கும் ஏதடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறும் என சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்