வவுனியா-சமளங்குளம் பாடசாலை மாணவர்கள் விஷேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

வவுனியா சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களால்  (09) நேற்றைய தினம் விஷேட விழிப்புணர்வு நிகழ்வு  பாடசாலையை சுற்றியுள்ள பிரதேசத்தில் நடைபெற்றிருந்தது .
கொரோனா மற்றும் டெங்கு இல் இருந்து எமது பிரதேசத்தை பாதுகாக்கும் நோக்கில் பாடசாலை சமூகத்தினரால் இச் செயற்பாடு  ஒழுங்கு படுத்தப்பட்டிருந்ததுடன் மாணவர்கள் இதனை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள், வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சிம்சுபன், சமளங்குளம் கிராமசேவையாளர் மெரீனா, சமளங்குளம் சமுர்த்தி உத்தியோகஸ்தர் திருமலர்ச்செல்வி, சமளங்குளம் சுகாதார சேவை உத்தியோகஸ்தர், மற்றும் பழைய மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்