பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம் !

பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தீர்மானம் எட்டப்படும் என ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களை இணைத்துக் கொள்ளுதல் மற்றும் பீடங்களில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து திறைசேரியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவை அனைத்தையும் கருத்திற் கொண்டு, பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் எனவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், மருத்துவம், பொறியியல் மற்றும் முகாமைத்துவம் உள்ளிட்ட அனைத்து பீடங்களுக்கும் மேலதிகமாக மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்