200 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி!
ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்
கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியே இன்று (10) அதிகாலை கிளங்கன் வைத்தியசாலைக்கு அருகில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் போது சாரதி பாய்ந்து தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் முச்சக்கரவண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை