பிரிட்டன் தூதுவருடன் சுமந்திரன் எம்.பி. பேச்சு

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹூல்டனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று(10) கொழும்பில் நடைபெற்றது.

நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46ஆவது கூட்டத் தொடர் உட்படப் பல விடயங்கள் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் ஒன்றைப் பிரிட்டனே கொண்டுவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்