கல்லடி முகத்துவாரம் தோமஸ் அன்டணி குறுக்கு வீதிகளை புனரமைக்கும் பணி

மக்களின் வரிப்பணத்தினை மக்களுக்கே கொண்டு செல்வோம் எனும் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட தோமஸ் அண்டனி குறுக்கு வீதிகளை புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மாநகர சபைக்கு மக்களினால் செலுத்தப்பட்ட வரிப்பணத்தினை முழுமையாக மக்களுக்கே கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் ஓர் அம்சமாக 12ம் வட்டாரத்திற்குட்பட்ட கல்லடி புது முகத்துவாரம் தோமஸ் அண்டனி குறுக்கு வீதிகளை புனரமைக்கும்  பணிகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை இன்று (10) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபையின் உறுப்பினர்களான சீ.ஜெயந்திரகுமார், த.இராஜேந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்