சிநேகபூர்வ ஆட்டத்தொடரில் ஓவம் விளையாட்டுக் கழகம் வெற்றி

வவுனியா, ஓமந்தை அரச உத்தியோகத்தர் குடியிருப்பின் ஓவம் விளையாட்டுக்கழகம், யாழ்ப்பாணம்,கோவளம் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றிற்கிடையில்,ஓவம் விளையாட்டுக்கழக மைதானத்தில் 12 ஓவர்களைக்கொண்ட சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் 3இடம்பெற்றன. இரு அணிகளின் வீரர்களும் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடினார்கள். முதலாட்டத்தில் முதலில் துடுப்பாடிய ஓவம், 7 விக்கட்டுகளுக்கு 104 ஓட்டங்களைப் பெற்றது. ரி.லதீஸ்வரன் 37, எஸ்.மௌலிதரன் 14, கஜீவன் 11 ஓட்டங்களைப் பெற்றனர். சயந்தன் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார். கோவளம் 12 ஓவர்களில் 91 ஓட்டங்களைப் பெற்றது. அருட்குமரன் 24,சயந்தன் 13 ஓட்டங்களைப் பெற்றனர். நிரோசன் 3, ஜனோஜன்,மௌலிதரன்,லதீசன் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

ஓவம் B அணியுடன் இடம்பெற்ற இரண்டாமாட்டத்தில் முதலில் துடுப்பாடிய கோவளம், 8 விக்கட்டுக்களுக்கு  85 ஓட்டங்களைப் பெற்றது.அருட்குமரன் 21, சிவகுமார் 20, மயூரன் 19 ஓட்டங்களைப் பெற்றனர். லவன், சுரேஸ், ஜனா தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினர். ஓவம் B அணி 67 ஓட்டங்களைப் பெற்றது. விஜிதரன் 13, பிரதீப் 08 ஓட்டங்களைப் பெற்றனர். சிவகுமார்,புவீந்திரன் தலா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற மூன்றாமாட்டத்தில் முதலில் துடுப்பாடிய கோவளம், 12 ஓவர்களுக்கு சகல விகட்டுக்களையும் இழந்து 68 ஓட்டங்களைப் பெற்றது. அருட்குமரன் 19, மயூரன் 15, சயந்தன் 10 ஓட்டங்களைப் பெற்றனர். ஜனோஜன் 4,லதீஸ்வரன் 3 விக்கட்டுக்களைக் கைப்பற்றினர். தொடர்ந்து துடுப்பாடிய ஓவம் 4 விக்கட்டுகளுக்கு 70 ஓட்டங்களைப் பெற்றது. மௌலிதரன் 31, நிரோசன் 14 ஓட்டங்களைப் பெற்று ஓவம் அணியின் வெற்றிக்கு வழிசமைத்தனர். ராகவன் 3,சயந்தன் 2 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.. தொடரில் 2 ஆட்டங்களை  வென்றதன் மூலம் ஓவம் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்ற இவ்வாட்டங்களில் கலந்துகொண்ட பிரமுகர்களுக்கு அணிகள் அறிமுகஞ் செய்துவைக்கப்பட்டன. தேனீர் விருந்துபசாரமும் இடம்பெற்றது. இரு அணிகளுக்கும் மிகச்சிறந்த மகிழ்வூட்டும் அனுபவமாக இது அமைந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.