இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஒன்றுகூடல் !

(நூருல் ஹுதா உமர்)

இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் நிர்வாகக் கூட்டம் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அ.கபூர் அன்வர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றியத்தின் தலைவர் யூ.எல்.எம்.ஜெஸ்மீர், ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் ஹாலித் ஹுசைன் மற்றும் அமைப்பின் பொருளாலர் எஸ்.டி. இத்ரீஸ் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு இம்மாத இறுதிப்பகுதியில் வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இப்பொதுக்கூட்டத்தில் நாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் இவ்வருடம்  இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள்  ஒன்றியத்தின் மாவட்ட மற்றும் பிரதேச மட்ட இணைப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த இணைப்பாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர் என ஒன்றியத்தின் பொதுச் செயலாளர்  அ.கபூர் அன்வர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்