தென்னாபிரிக்க வைரசும் இலங்கையில் பரவியிருக்கலாம்- பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்
தென்னாபிரிக்க கொரோனா வைரசும் இலங்கைக்குள் நுழைந்திருக்கலாம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்க வைரசும் இலங்கையில் பரவிக்கொண்டிருக்கலாம் அது கண்டுபிடிக்கலாம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
பிரித்தானியா கொரோனா வைரஸ் பரவுவது இலங்கையில் கவலையளிக்கின்ளது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.
சோதனைகள் மூலம் நான்கு இடங்களில் கொரோனா வைரசினை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ள போதிலும் நான்பு இடங்களில் மாத்திரம் வைரஸ் காணப்படுகின்றது என தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
புதியவைரஸ்வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாங்கள் புதிய பல நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளோம்,பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இது அவசியமாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை