ஸ்ரீ வாணி ஆரம்ப வித்தியாலயத்தில் பாடசாலைகளில் தரம் 01 மாணவர்கள் உள்வாங்கும் நடவடிக்கை!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தரம் ஒன்று மாணவர்கள் இன்று (15 சிறப்பாக உள்வாங்கப்பட்டன.

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடளவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில்

 தரம் 01 மாணவர்கள் உள்வாங்கும் நடவடிக்கைகள் இன்று (15) திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றன.

ஒவ்வொரு வருடமும் தரம் ஒன்றுக்கு மாணவர்கள் உள்வாங்கும் நடவடிக்கைகள்

ஜனவரி மாதம் இடம்பெறுகின்ற போதிலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக

இந்நடவடிக்கைகள் பிற்போடபட்டன.

இந்நிலையில் இன்று சகல பாடசாலைகளிலும் மாணவர்கள்

உள்வாங்கப்பட்டதுடன் தரம் ஒன்றுக்கு உள்ளவாங்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் பாலர் புரட்சி

எனும் செயற்திட்டத்தின் கீழ் முதன் முறையாக மரக்கன்று ஒன்றும் வழங்கப்பட்டன.

வீடுகளில் மரக்கன்றுகள் நாட்ட இடமில்லாத மாணவர்களுக்கு பாடசாலை வளவில்

மரக்கன்றுகள் நாட்டுவதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தன. இதற்கமைய

பாடசாலை வளவிலும் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

தேசிய நிகழ்வுக்கு அமைவாக அட்டன் கல்வி வலயத்தின் பிரதான நிகழ்வு

அட்டன் கல்வி வலயத்தின் தோட்ட பாடசாலையான  ஸ்ரீ வாணி ஆரம்ப வித்தியாலயத்தில்

பாடசாலையின் அதிபர் எஸ்.ராஜரத்னம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் காப்பாளரும் அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளருமான பி.ஸ்ரீதரன் கலந்து

கொண்டதுடன் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்றதுடன் வகுப்பறைகளையும் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

அட்டன் கல்வி வலயத்தில் இவ்வாருடம் 133 பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கான

மாணவர்கள் உள்வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன் இம் மாணவர்

 ஒவ்வொருக்குமாக சுமார் 3500 மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த மரக்கன்றுகளை ஐந்து வருடம் பேணிப்பாதுப்பதற்கான அறிவுறுத்தல்கள்

பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த மரக்கன்று

 தொடர்பாக தரவுகள் அறிக்கைகள் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் பாடசாலை
ஊடாக மேற்கொண்டுள்ளதாகவும் இவ்வாறு முன்னெடுக்கப்பட்ட ஒரு சிறந்த நல்லத்திட்டம்

இது வென்று இதன் மூலம் மாணவர்களுக்கு சிறிய வயது முதல் இயற்கை சூழுலை

பாதுகாப்பதற்கு  மரம் ஒன்று நாட்டப்பட வேண்டும் என்ற எண்ணக்கரு ஆரம்ப நாளிலேயே

வளர்க்கப்படுவதாகவும் அத்தோடு பாலர்

பராயத்திலேயே இயற்கையை பாதுக்காக்கப்பட வேண்டும் என்பது இதன் ஊடாக

உணர்த்தப்படுவதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு அட்டன் கல்வி வலயத்தின் ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் எஸ்.புவணேஸ்வரி, சுற்றாடல் பிரிவு ஆசிரிய ஆலாசகர் மைக்கல் செபஸத்தியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.