நாமல் ராஜபக்ஷ உட்பட சிலருக்கு நீதிமன்றத்தினால் அழைப்பானை

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட நிறைவேற்று குழு உறுப்பினர்களை எதிர்வரும் 15ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தினால் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அடுத்த தேர்தலுக்கு முன்னர் புதிய கிரிக்கெட் யாப்பை தயாரிப்பது தொடர்பிலான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனு மீதான விசாரணைகளின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அர்ஜுண ஒபேசேகர மற்றும் மாயாதுன்ன கொரயா ஆகிய நீதிபதிகளினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.