காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை முடக்க வேண்டாம்! – ஹர்ஷ டி சில்வா

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ராஜபக்ச அரசு முடக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் செயற்படுவதையும், நட்ட ஈடு வழங்கப்படுவதையும் விரும்பவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றது எனவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கு எதிர்ப்பு வெளியிடுவது ஒட்டுமொத்த நல்லிணக்க செயற்பாடுகளையும் எதிர்ப்பதற்கு ஒப்பானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை நடத்திச் செல்ல நாம் விரும்பவில்லை எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக அரச நிதியை ஒதுக்குவதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பதிலளிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.