புதிய வகை கொரோனா தொற்றினால் நாட்டிற்கு ஆபத்து இல்லை

பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அது நாட்டிற்கு ஆபத்தில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும், நாட்டை முடக்கும் தேவை இல்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, கொரோனா நோயாளர்கள் இன்னும் இரண்டு மாதங்களில் குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக அரச வைத்திய உத்தியோகத்தர் சங்கத்தின் சுற்றுலா துறைசார் மருத்துவர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்