ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயம் கல்முனையில் திறப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின்  கல்முனைத்தொகுதிக்கான பிரதம காரியாலய திறப்பு விழா இன்று(16)  இரவு  அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸாக்கின் தலைமையில்  இடம்பெற்றது.

இதன் போது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்   பாராளுமன்ற உறுப்பினர்களான  இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்  ,முஜிபுர் ரஹ்மான்,  இம்ரான் மஹ்ரூப்,  ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 இதன் போது எதிர்வரும் காலங்களில் மாகாண சபை தேர்தல் உட்பட அரசியல் நிலவரங்கள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைளை எடுப்பது என தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்