காரைதீவு கடலோரம் பூராக டெங்கு ஒழிப்பு சிரமதானம்!
காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர். தஸ்லிமா பஷீரின் ஏற்பாட்டில் இச்சிரமதானம் இடம்பெற்றது.
காரைதீவு 7ஆம் பிரிவில் டெங்கு நோயாளியொருவர் இனங்காணப்பட்டதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இச்சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
காரைதீவு பிரதேசசபையின் வாகனங்கள் சகிதம் ஊழியர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் கிராமசேவையாளர்கள் சமுர்த்தி அலுவர்கள் பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் சிரமதானத்தில் பங்கேற்றனர்.
மாளிகைக்காடு கடற்கரைப்பிரதேசத்தில் தரித்துவைக்கப்பட்டிருந்த படகுகளுக்குள் டெங்கு குடம்பிகள் இருக்கக்கண்டுபிடிக்கப்பட்டது.
படகு உரிமையாளர்களுக்கு உடனடியாக படகுக்குள் தேங்கிநிற்கும் தண்ணீரை அகற்றி சுத்தமாக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இச்சிரமதானத்தின்மூலம் சுமார் 2கிலோமீற்றர் தூர கடலோரம் சுத்தமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை