காரைநகரில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்!

காரைநகர் இந்துகல்லூரிக்கு சொந்தமான 2 பரப்பு காணி மற்றும் பொதுமக்களுக்கு சொந்தமான 6 பரப்பு காணி என 8 பரப்பு காணியை கடற்படையின் எலாற கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் முயற்சி இடை நிறுத்தப்பட்டுள்ளது.

நில அளவை திணைக்கள அதிகாரிகளினால் கடற்படையின் தேவைக்காக குறித்த காணியை அளவீடு செய்வதற்கு இன்று (புதன்கிழமை) காலை முயற்சிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

மேலும் பிரதேச செயலாளருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து காணி அளவீடு இடைநிறுத்தப்பட்டது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்