ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட காரியாலயம் சம்மாந்துறையில் திறப்பு!
(ஐ.எல்.எம் நாஸிம்)
ஐக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட காரியாலய திறப்பு விழாவும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அங்கத்துவ அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வும் நேற்று (17) மாலை ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்றது.
இதன் போது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ,முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப், அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸாக் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது எதிர்வரும் காலங்களில் கட்சி வளர்ச்சி உட்பட அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை