காத்தான்குடியில் கழிவு தேயிலை தூளை பொதி செய்து விற்பனை செய்யும் களஞ்சியசாலை முற்றுகை!
மட்டக்களப்பு காத்தான்குடியில் கழிவு தேயிலை தூளை பொதி செய்து விற்பனை செய்யும் தொழிற்சாலை மற்றும் களஞ்சியசாலையை விசேட அதிரடிப்படையினர் நேற்று (17) முற்றுகையிட்டு இலட்சக் கணக்கான பெறுமதியான கழிவு தேயிலையை மீட்டுள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள தேயிலைதூள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்துக்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையில் இன்று ஈடுபட்டனர்.
இதன்போது, களுஞ்சியசாலையில் சுமார் 60 கிலோ கிராம் கொண்ட கழிவு தேயிலையை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை