இம்ரான்கானை வரவேற்க ஒத்திகை!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமரை வரவேற்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒத்திகைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இன்று அங்கு சென்று ஒத்திகை நிகழ்வுகளை கண்காணித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமரின் வருகையை ஏற்பாடு செய்வதற்கு நாட்டுக்கு வந்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரிகளுடன் அவர் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்