முன்னாள் பா.உ ஸ்ரீநேசன் மீது பொலிஸார் விசாரணை
பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையிலான சாத்வீக மக்கள் பேரணியில் கலந்து கொண்டமைக்காக
மட்டக்களப்பு முன்னாள் பா.உ ஸ்ரீநேசன் மீது 18.02.2021 அன்று அவரது இல்லத்தில் மட்டக்களப்பு
பொலிஸார் விசாரணை நடாத்தி வாக்கு மூலத்தினைப் பெற்றனர்.
ஜனநாயக நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் சார்பாக வன்முறையற்ற
சாத்வீகப் பேரணியில் தாம் எந்தவொரு இடத்திலும் வன்முறைகள் ஏற்படாத விதத்தில்
பொறுமையுடன் பேரணியில் கலந்து கொண்டதாகவும் ஸ்ரீநேசன் குறிப்பிட்டார்.
பொலிஸார் தாக்கிய போதிலும் தான் பொறுமை இழக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.
மேலும் இப்படியான சாத்வீகப் போராட்டங்கள் “ஜனகோசய” என்ற பெயரில் தென்னிலங்கையில் நடை பெற்றதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
Attachments area












கருத்துக்களேதுமில்லை