கிளிநொச்சியில் கடும் மழைக்கு மத்தியிலும் தீச்சட்டி போராட்டம் ஆரம்பம்
கிளிநொச்சியில் கடும் மழைக்கு மத்தியிலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் தீச்சட்டி போராட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு விலந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இன்று (சனிக்கிழமை) 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்த தீச்சட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், போக்குவரத்து கழகங்கள், அரசியல் பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் கலந்துகொண்டு தங்களிற்கான நீதி கிடைக்க வலு சேர்க்குமாறும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
அதற்கமைய பல தரப்பினரின் பங்கபற்றலுடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கருத்துக்களேதுமில்லை