கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன் கருவிகளும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரணவிடம் விமானப்படை தலைமையகத்தில் ,இவை நேற்று கையளிக்கப்பட்டன..
நுளம்பு பெருக்கத்தை கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கான புதிய தொழில்நுட்பம்
டெங்கு நுளம்புகள் இனம்பெருகும் இடங்களை கண்டறியவும், இனப்பெருக்கத்திற்கு உள்ளான பகுதிகளில் வான்வழியாக திரவங்கள் தெளிக்கப்படவேண்டியதை கண்காணிக்கவும் இந்த கெமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு ட்ரோன் கருவிகள் பயன்படுத்தப்படும் என விமானப்படையின் ஊடக பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
புதிய தொழில்நுட்பம் மூலம், நுளம்புகளின் இனப்பெருக்க இடங்களை வான்வழி காட்சியாகப்பெற்று அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வரைபடமாக்கவும் வழிவகை செய்யப்படவுள்ளது.
மேலும், அவசியமான வேளைகளில் தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்தவும் அவை பயன்படுத்தப்படவுள்ளதாகவும் விமானப்படையின் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மேல் மாகாண பிரதம செயலாளர் ஜெயந்தி விஜேதுங்க, மேல் மாகாண ஆளுநரின் செயலாளர் பி.சோமசிரி மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை