மட்டக்களப்பில் வர்த்தக அமைச்சர் பன்துல்ல குணவர்தனவினால் உணவு களஞ்சியசாலை திறந்து வைப்பு

மட்டக்ளப்பு கள்ளியன்காடில் அமைந்துள்ள உணவு களஞ்சியசாலை வர்த்தக அமைச்சர் பந்துள்ள குணவர்த்தவினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது.

யுத்தத்தினால் பாதிக்கப்படு பயன்படுத்தமுடியாமல் சேதமடைந்திருந்த கள்ளியன்காடு உணவு களஞ்சியசாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபிட்சத்தின் தொலை நேக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைய சுமார் 70 மில்லியன் ரூபா செலவில் புணருத்தாரணம் செய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வரத்தக அமைச்சர் பந்துள்ள குணவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இக்களஞ்சியசாலையை வைபவரீதியகத் திறந்து வைத்தார். இதன்போது பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேமம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு அபிவிருத்திக் முழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், உணவு ஆணையாளர் தணைக்கள பிரதம கணக்காளர் கலாநிதி. ஈ.எம்.என்.ஆர். பண்டார, மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், விவசாயிகள் பலரும் பிரசன்னமாயிருந்நதனர்.

இதன்போது அமைச்சர் பந்துள்ள குணவர்தன கருத்து தெரிவிக்கையில் சுதந்திர்ததிற்குப் பின் வந்த எந்த அரசாங்கமும் விவசாயிகளுக்;கு வழங்காத பாரிய ஏற்பாடுகளையும், வசதி வாய்ப்புக்களையம் இந்த அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வேண்டியளவு நெல்உற்பத்தி செய்வதற்குத் தேவையான உரம், நீர் என்பவற்றை இலவசமாக வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அரிசியினை முழுமையாக நிறுத்தியிருக்கிறது. நாடு அரிசிக்கு கிலோ 50 ரூபாவையும், சம்பாவிற்கு 52 ரூபாவினையும் விலை நிர்ணயம் செய்திருக்கிறது. இதனால் குறைந்த செலவில் நெல்உற்பத்தி செய்தது விவசாயிகள் இலாபம் பெறக்கூடியதாக உள்ளது. இதனால் விவசாயிகளையும்;, நுகர்வோரையும் நாம்பாதுகாக்கும் பொறுப்பு எமக்குள்ளது எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் கிழக்கிலுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலை வயாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றும் இலங்கை வரலாற்றில் க.பொ.த. சாதாரண தரம் சித்தியடையாத ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலை வழங்க முடிவெடுத்த ஒரேயொரு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்பதை நினைவுபடுத்தவிரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.