பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 30 வயதானவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பருத்தித்துறை பகுதியில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
கருத்துக்களேதுமில்லை