15 பெண்கள் தற்கொலை தாக்குதலை நடத்தும் உறுதி மொழியை செய்ததாக விசாரணையில் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்படும் சஹ்ரான் ஹாசிமின் போதனை வகுப்புகளில் கலந்துகொண்ட பெண்கள் தற்கொலை தாக்குதலை மேற்கொள்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலி சார் தெரிவித்துள்ள னர்

சஹ்ரான் ஹாசிமின் போதனை வகுப்புகளில் கலந்துகொண்ட பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளது

2018 டிசம்பரில் குறிப்பிட்ட வகுப்பில் 15 பெண்கள் கலந்துகொண்டனர் அவர்கள் தாங்கள் தற்கொலைகுண்டுதாக்குதலை மேற்கொள்வதாக சஹ்ரான் ஹாசிமிற்கு சபதம் செய்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

15 பேரில் ஐவர் சம்மாந்துறையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது கொல்லப்பட்டுவிட்டனர் என்பது தெரியவந்துள்ளது  ஏனைய பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்