முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக்கிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பாக வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாரூக்கிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

ஹீனைஸ் பாரூக்கின் மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு இன்று (21) காலை சென்றிருந்த மன்னார் பொலிஸார் வாக்கு மூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

பேரணியில் கலந்துகொண்டபோது, நீதிமன்றக் கட்டளை மற்றும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை கவனத்தில் கொள்ளப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்