இலங்கையின் அரச அலுவலக நிருவாகமும் சமகால நடைமுறைகளும்” நூல் வெளியீட்டு விழா

இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்த  சிரேஸ்ட அதிகாரியும், பின்தங்கிய கிராமப் பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளருமான கலாநிதி.எஸ்.அமலநாதன் எழுதிய இலங்கையின் அரச அலுவலக நிருவாகமும் சமகால நடைமுறைகளும் நூல் வெளியீட்டு விழா நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இறைவரித் திணைக்களத்தின் சிரேஸ்ட ஆணையாளரும், சட்டத்தரணியுமான மு.கணேசராசாவின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக “டேபா” ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக பின்தங்கிய கிராமப் பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், முன்னால் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் அவர்களும் கலந்து கொண்ட நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட  செயலாளரும் அரசாங்க அதிபருமான க.கருணாகரன், பதில் நீதிபதியும் சட்டத்தரணியுமான க.பேரின்பராசா மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றப்பட்டு தமிழ் மொழி வாழ்த்துப்பாவுடன் ஆரம்பமாகிய நிகழ்வில்  நூலின் முதல் பிரதிகள்  நூலாசிரியரினால் வெளியிட்டு வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதிதிகளினால் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்காக நூலின் பிரதிகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கிழக்குப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறையின் பேராசிரியர் வே.குணரெத்தினர் நிகழ்த்தியிருந்தார். அதன் பிற்பாடு அதிதிகளின் விசேட உரைகள் இடம் பெற்றதனைத் தொடர்ந்து நூலாசிரிற்கு பொன்னாடை போர்த்து மலர் மாலை அணிவித்து பாராட்டியதுடன், நூலாசிரியரின் ஏற்புரையினைத் தொடர்ந்து  நிகழ்வானது இனிதே நிறைவு பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.