ஓட்டமாவடியில் கிராம சேவை அதிகாரிகள் கறுப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம சேவை அதிகாரிகளை முகநூல் வாயிலாக அவதூறாக பேசியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சேவை அதிகாரிகள் கறுப்புப்பட்டி அணிந்து மாவட்டம் முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கையினை இன்று திங்கட்கிழமை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை அதிகாரிகள் கறுப்புப்பட்டி அணிந்து செயலக முன்பாக தங்களது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், பின்னர் கறுப்புப்பட்டியுடன் தங்களது கடமைகளை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் ஓந்தாச்சிமடம் பகுதி கிராம சேவை அதிகாரியை முகநூல் வாயிலாக ஒருவர் அவதூறாக பேசியதுடன், அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடையாற்றும் கிராம சேவை அதிகாரிகளையும் அவதூறாக பேசி கிராம அதிகாரிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

கிராம உத்தியோகத்தர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும், அவதூறாக பேசுபவர்கள், கொலை அச்சுறுத்தல் மேற்கொள்பவர்களை மிக வன்மையாக கண்டிக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.